![](https://static.wixstatic.com/media/001d32_c2e8b71e8c754f7ea45e981d391167b4~mv2.jpg/v1/fill/w_905,h_1280,al_c,q_85,enc_auto/001d32_c2e8b71e8c754f7ea45e981d391167b4~mv2.jpg)
ஜமால் முஹம்மது கல்லூரி (சவூதி அரேபியா, ஜெத்தா கிளை) முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் “இஃப்த்தார் " இம்மாதம் மார்ச் 16ஆம் தேதியன்று (சனிக்கிழமை) அன்று ஜெத்தா அஸீஸியா ஷதாப் சவுத் இந்தியன் உணவகத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவரும், கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினருமான ஜனாப் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
![](https://static.wixstatic.com/media/001d32_bdc8db3a8c2249d792bccf8a46c992e3~mv2.jpg/v1/fill/w_980,h_1307,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/001d32_bdc8db3a8c2249d792bccf8a46c992e3~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/001d32_0d2adc5db12c4241aa48a14850a59127~mv2.jpg/v1/fill/w_958,h_630,al_c,q_85,enc_auto/001d32_0d2adc5db12c4241aa48a14850a59127~mv2.jpg)
முன்னாள் மாணவர்கள் சந்தித்து கொண்ட இந்த நெகிழ்ச்சிக் சந்திப்பில் ஒவ்வொருவரும் தாங்கள் படித்த தருணத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தும், தாங்கள் தற்போது பணியாற்றி வரும் நிறுவனங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அமைப்பின் செயலாளர் ஜனாப் இஜாஸ் அஹ்மத் இந்த அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்று விவரமாக எடுத்துரைத்தார். ஜெத்தாவில் வசிக்கும் ஜமால் கல்லூரி மாணவர்கள் இதே போல் தொடர்ந்து ஒன்றுகூட வைப்பதாகவும் அவர் உறுதி அளித்தார்.
அன்புடன் சிராஜ்.
Comments