
ஜெத்தா மேற்கு மண்டல NRTIA அயலக திமுக சார்பாக 06.04.2024 அன்று மாபெரும் சமூக நல்லிணக்க இப்தார் என்னும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஷரபியா லக்கி தர்பார் உணவக அரங்கில் நடைபெற்றது.
முஹம்மது ஜைனுலாபுதீன் கிராத் ஒதினார் திரு.எழில்மாறன் வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக சவுதி அரேபியா NRTIA பொறுப்பாளர் திரு. பிரேம்நாத் அவர்கள் கலந்து கொண்டு ஜெத்தா மேற்கு மண்டல நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து அனைவரையும் கவுரவித்து உரையாற்றினார்.

ஜெத்தா மேற்கு மண்டலம் சார்பாக பொறியாளர் காஜா மைதீன் அவர்கள் உரையாற்றி பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் இந்தியா கூட்டணியில் அங்கம் வைக்கும் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அறிமுகம் செய்து வைத்து NRTIA சமூக பணிகள் பற்றி எடுத்துக் கூறினார்.

ஜெத்தா மண்டல தமுமுக சார்பாக திரு. அப்துல் மஜீத், OICC சார்பாக திரு.ஹக்கீம் பாரக்கல் KMCC சார்பாக சிகாப் தாமரை குளம் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினை சேர்ந்த திரு.அகமது பாஷா திரு.சம்சுதீன் திரு. ஜக்கரியா தொழிலதிபர் திரு.பீட்டர் மற்றும் திரு.நசிர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
திரு. ஆதம் அபுல்ஹசன் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து வாழ்த்துரை வழங்கினார்.


திரு. ஹாஜா முகைதீன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி கழக பணிகளின் செயல்பாடுகள் குறித்தும் உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் பிற மாநில சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பெண்கள் குழந்தைகள் என பெரும் திரளாக கலந்து கொண்டனர், அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. திரு. இப்ராஹிம் மரைக்காயர் மருத்துவர் கமல், திரு. நிஜாம் திரு. சீனீ முஹம்மது திரு.பியாரே ஜான் உள்ளிட்ட கழகத்தினர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியின் இறுதியில் தாதாபாய் திரு. அபுபக்கர் நன்றியுரையாற்றினார்.
புனித ரமலான் மாதத்தின் ஒரு சிறந்த ஒன்றுகூடலாகவும் அமைந்த இந்த சிறப்பான நிகழ்ச்சியினை ஜெத்தா மேற்கு மண்டல நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.
அன்புடன் சிராஜ்
Comentarios