ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான புனித ரமலான் இஃப்த்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஜெத்தா ஷரஃபியா லக்கி தர்பார் உணவரங்க வளாகத்தில் 23 மார்ச் அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜெத்தாவில் வசிக்கும் தமிழர்கள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சங்க நிர்வாகிகளும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஜெத்தாவில் வசிக்கும் தமிழர்கள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சங்க நிர்வாகிகளும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கு வருகை புரிந்தவர்களை திரு.காஜா மொஹிதீன் வரவேற்றார். மௌலவி முஜீபுர் ரஹ்மான் உமரீ அவர்கள் மனித நேயமும் சமூக நல்லிணக்கமும் என்ற தலைப்பிலும் ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா கொண்டாட்டம் குறித்தும் விளக்கினார்.
மேலும் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற மாணவ மாணவிகளுக்கான திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், மகளிருக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
ஜெத்தா வாழ் தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் மற்றும் திருச்சி ஜமால் மொஹமத் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் ஜனாப் ரஹமதுல்லாஹ், இந்திய தூதரக பள்ளியின் நிர்வாக குழு தலைவர் திருமதி. ஹேமா, உதவி முதல்வர் திருமதி பாராஹ் மசூத் மற்றும் முனைவர் கவிதா ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
கடந்த வருடம் ஹஜ் யாத்ரிகளுக்கு சிறந்த முறையில் சேவை புரிந்த ஜெத்தா தமிழ்ச்சங்கம் தன்னார்வலர்களுக்கு இந்திய தூதரகத்தின் நற் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிறைவாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் திரு. இஜாஸ் அஹ்மத் நன்றி கூறினார். நிகழ்ச்சியினை ஜெய் ஷங்கர் சிறப்பாக தொகுத்து வழங்க மற்ற ஏற்பாடுகளை திரு. முரளி உள்ளிட்ட ஜெத்தா தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.
அன்புடன் சிராஜ்.
Comments