இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF)
ஜித்தா மேற்கு மண்டலம்,
சவூதி அரேபியா, கடந்த 21-03-24 அன்று ஜித்தாவில் மிக சிறப்பாக சமுதாய சொந்தங்களுடன் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தியது.
இதில் 500க்கு மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்ட நிகழ்வில் இஸ்லாமும் அதிகாரமும் என்ற தலைப்பில் தமுமுகவின் தலைமை நிர்வாக குழு உறுப்பினர் முனைவர். மௌலவி முஜிபுர் ரஹ்மான் உமரி அவர்கள் காலத்திற்கு ஏற்ற சிறப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் சமீபத்தில் உலகசாதனை செய்த சகோ.அப்துல் மஜித் பத்ருதீன் அவர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.
மேலும் மழலைகளின் சிற்றுரைகள், வாழ்த்துரைகள், பரிசளிப்புகள், தமுமுகவின் 2023 ஆண்டு காலச்சுவடுகள் காணொளி என பல்வேறு அம்சங்கள் நிகழ்ச்சிக்கு மெருகூட்டிய நிகழ்வுகளாகும் .
மேலும் ஜித்தாவின் அனைத்து தமிழ் அமைப்பு பிரதிநிதிகளும், கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வில் பொறியாளர் கீழை இர்பான் தலைமையுரையும் பொறியாளர் அப்துல் ஹலீம் நன்றியுரையும் ஆற்றினார்கள்.
அன்புடன் சிராஜ்
Comments