
ஜித்தா தமிழ்ச் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர் மல்லப்பன் அவர்களின் முன்னெடுப்பில் சென்னை மயிலாப்பூர் கிரில் பாக்ஸ் உணவகத்தில் நோன்பு துறப்பு நிகழ்வு நடைபெற்றது.

ஜித்தா தமிழ்ச் சங்கத்தில் தோளோடு தோள் நின்று நிகழ்ச்சிகளையும் சமூகச் சேவைகளையும் அளித்து, இப்போது தமிழ்நாட்டுக்கு திரும்பி விட்ட நண்பர்கள் மற்றும் விடுமுறையில் வந்திருக்கும் நண்பர்கள் அனைவரும் இறையருளால் ஒன்று கூடினோம்.

மல்லப்பன், ரஹமதுல்லா,நிஜாமுத்தீன்,அன்புமணி, இமாம், விஜயன், ஷெரீப் (ரியாத்) அமீர் பாஷா, ஆசாத், சிராஜ் இன்னும் சில தஞ்சை நண்பர்கள் என நடந்த சந்திப்பு, எந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர் சந்திப்பு களுக்கும் குறைவில்லாமல் இருந்தது.

பழைய ஜித்தா நாட்களை அசைபோட்டபடி ஒவ்வொருவரும் 25 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று நினைவுகளில் நீந்திப் பின் இயல்பு நிலைக்கு வந்து கையசைத்து விடை பெற்றனர்.
அன்புடன் சிராஜ்
Kommentarer