top of page

சவுதியில் 2021 ஆம் ஆண்டு வீட்டு பணியாளர்களின் எண்ணிக்கை குறைவு

Writer: RaceTamil NewsRaceTamil News

Updated: Dec 27, 2021

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 400,000 குறைந்துள்ளது





2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சவுதி அரேபியாவில் வீட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை 400,000 ஆக குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது என்று புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையம் (GASTAT) தெரிவித்துள்ளது.


இது 2020 ஆம் ஆண்டில் 1.94 மில்லியன் ஓட்டுநர்களைப் பதிவு செய்ததாகவும், தற்போது அதன்படி ,2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 1.75 மில்லியன் ஓட்டுநர்களைப் பதிவு செய்ததால், வீட்டுப் பணியாளர்களில் உள்ள ஓட்டுநர்களின் எண்ணிக்கை 200,000 ஆகக் குறைந்துள்ளது.


அதன்படி ,குடும்ப மேலாளர்களின் எண்ணிக்கை 2,101ல் இருந்து 2,488 ஆக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்களுக்கான பொது ஆணையம் தெரிவித்துள்ளது.


மேலும் சமையல்காரர்கள் மற்றும் பணிப்பெண்களின் எண்ணிக்கையில் 51,000 முதல் 54,000 வரை உயர்ந்துள்ளது.


வீடுகளில் வேலை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை 2,536ல் இருந்து 2,238 ஆக குறைந்துள்ளது.


அதே போல் தையல்காரர்கள் 1,462 முதல் 1,301 ஆக குறைந்துள்ளது.


வீடுகளில் பணிபுரியும் செவிலியர்கள் அல்லது "இன்-ஹோம் கேர் அல்லது ஹோம் ஹெல்த்கேர்"(“In-home care or home healthcare”) என்று அழைக்கப்படும் செவிலியர்களும் 2,958 செவிலியரில் இருந்து 1,947 ஆக குறைந்துள்ளனர்.



Commentaires


bottom of page