மார்ச் 22 ,வெள்ளிக்கிழமை அன்று *இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் ரியாத் மத்திய மண்டலம் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி ரியாத் சுலை இஸ்திராஹ்வில் சுமார் 600க்கும் மேற்பட்டோர் குடும்பமாக கலந்து கொண்டனர் , மேலும் மற்ற சமுதாய அமைப்புகள் ரியாத் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இஃப்தார் நிகழ்ச்சிக்கு ரியாத் மண்டல செயற்குழு உறுப்பினர் *மெளலவி யூசுப்* அவர்கள் இறைவசனம் ஓத, ரியாத் மண்டல இணைச் செயலாளர் *ஆரூர் நிசார் அலி* அவர்கள் வரவேற்புரையாற்ற, தொடர்ந்து ரியாத் மண்டல துணைத் தலைவர் மெளலவி இப்ராஹிம் அன்வாரி அவர்கள் ரமலான் மாதத்தின் சிறப்புகள் என்ற தலைப்பில் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் மார்க்க உரையாற்ற , மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது* அவர்கள் நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்றும் அந்த சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவது இந்த இஃப்தார் நிகழ்ச்சியின் நோக்கம்* என்பதை எடுத்து கூறி தாயகத்திலும் & அயல்நாட்டிலும் தமுமுக செய்து வரும் சேவைகள் குறித்தும் எடுத்து கூறி தலைமை உரையாற்றினார்.
மஃரிப் தொழுகைக்கு பிறகு இஸ்லாமிய அழைப்பாளர் மௌலவி முஹம்மது அவர்கள் ரமலான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் நோன்பு நோற்கிறோமா என்று நம்மை நாமே சுயபரிசோதனை செய்து சரியான முறையில் நோன்பு நோற்க வேண்டும்* என்று குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் மார்க்க சொற்பொழிவு ஆற்றினார்.
மேலும் மண்டல செயலாளர் நல்லூர் ரஹ்மத்துல்லா அவர்கள் கடந்த ஓராண்டில் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் ரியாத் மத்திய மண்டலம் செய்த சேவைகள் குறித்து எடுத்துரைத்து தாங்கள் அனைவரும் இணைந்து சேவையாற்றும் படி அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
நிறைவாக மண்டல துணை செயலாளர் சென்னை இப்ராஹிம் அவர்கள் நன்றியுரையாற்ற துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியை மண்டல துணை செயலாளர் அரசை ஆஷிக் இக்பால் அவர்கள் மிக சிறப்பாக ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.
அன்புடன் சிராஜ்
Comments