லண்டன், பாரிஸ் மற்றும் மாலத்தீவுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு சிறப்பு கட்டணங்கள் பொருந்தும்.
துபாய்யை தளமாகக் கொண்டு விளங்கும் விமான நிறுவனமான எமிரேட்ஸ் விமான நிறுவனம் காதலர் தின சிறப்பு சலுகையில் 25 சதவீத தள்ளுபடி அறிவித்துள்ளது. இந்த காதலர் தின சிறப்பு சலுகை ஆனது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயணிகளுக்கு செல்லுபடியாகும். மேலும் ஒரே முன்பதிவு குறிப்பில் 9 பேர் வரை முன்பதிவு செய்யலாம். இந்த சிறப்பு சலுகை பெற பிப்ரவரி 7 முதல் 14 வரை முன்பதிவு செய்யலாம்.
இந்த சிறப்பு கட்டணம் ஆனது,லண்டன், இஸ்தான்புல், மொரிஷியஸ், நைரோபி, சீஷெல்ஸ், மாலத்தீவு, கொழும்பு, கெய்ரோ, அம்மன், பெய்ரூட், சூரிச், மாஸ்கோ, ஆம்ஸ்டர்டாம், முனிச், பாரிஸ், பார்சிலோனா மற்றும் ஃபூகெட் உள்ளிட்ட 20 விடுமுறை இடங்களுக்கு பயணிகள் பயணத் திட்டங்களை உருவாக்கலாம்.
தற்போது, துபாய் மற்றும் லண்டன் இடையேயான கட்டணம் 800- திஹம் முதல் 1,500 என்ற அளவில் குறைகிறது. பாரிஸ் 2,000 திர்ஹம் வரை செலவாகும், அதே சமயம் மாலத்தீவுகள் 3,000 திர்ஹம்களாக இருக்கும்.
எமிரேட்ஸ் ஹாலிடேஸ்( Emirates Holidays) உடன் "காதல் பயணத்தை" (“romantic getaway” )ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது, ஒரு நபருக்கு இலவச காலை உணவுடன் 1,989 திர்ஹம் முதல் தொடங்குகிறது.
Comments