விமான கண்காணிப்பு இணையதளமான FlightAware வெளியிட்டுள்ள அறிவிப்புகளின் படி, உலக அளவில் புதன்கிழமை மட்டும் 2,280 விமானங்கள் உலகளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் வெளிப்பட்ட பயண குழப்பத்தின் தொடர்ச்சியாக இந்த வாரம் உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, ஓமிக்ரான் மாறுபாட்டின் பரவல் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக விமான நிறுவனங்கள் கூறியுள்ளது.
விமான கண்காணிப்பு இணையதளமான FlightAware வெளியிட்டுள்ள அறிவிப்புகளின் படி, உலக அளவில் புதன்கிழமை மட்டும் 2,280 விமானங்கள் உலகளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் 740 விமானங்கள் அமெரிக்காவில் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செவ்வாயன்று, 3,100 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, அவற்றில் 1,291 விமானங்கள் அமெரிக்காவிற்குள் செல்லும் விமானங்கள் ஆகும்.
டெல்டா ஏர்லைன்ஸ் மற்றும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் ஆகியவை இந்த வாரம் அதிக விமானங்களை ரத்து செய்ததில் அடங்கும் என்றும், டெல்டா ஏர்லைன்ஸ் திட்டமிடப்பட்ட 4,133 விமானங்களில் 250 க்கும் மேற்பட்டவற்றை ரத்து செய்துள்ளது.அதே நேரத்தில் அலாஸ்கா அதன் நெட்வொர்க் முழுவதும் 170 விமானங்களை ரத்து செய்தது.
Comments