இந்த வருடம் ஹாஜிகளின் பல கஷ்டங்களை அனுபவித்தார்கள் அதற்கு பல தரப்பில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இனிமேல் இது போன்று நடக்க கூடாது என்பதே அனைவரின் விருப்பம்.
வரும் காலங்களில் சிரமங்கள் ஹாஜிகளுக்கு ஏற்பட கூடாது என்ற நோக்கத்தில் இந்தியன்ஸ் வெல்ஃபர் ஃபோரத்தின் சார்பாக ஹஜ் கமிட்டி மற்றும் ஜித்தா இந்திய தூதரகத்திற்கு பல கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்கள்.
அதில் முதல் கோரிக்கை மரணமடைந்த ஹாஜிகளுக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது அதை ஏற்று மரணமடைந்த ஹாஜிகளுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க ஹஜ் கமிட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF)-தமுமுகவின் அயலக அணி, ஜித்தா மேற்கு மண்டலம் நன்றியை தெரிவித்து இருக்கிறார்கள்.
மேலும் அவர்கள் இது போன்ற இன்னும் பல கோரிக்கைகளை ஹஜ் கமிட்டி செயல் படுத்தி, வரும் ஆண்டில் ஹாஜிகளின் கஷ்டங்களை குறைக்க வழி வகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
அன்புடன் சிராஜ்
Comments